Wednesday 28 December, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (4)

நீண்ட இடைவெளிக்கு பின் இதோ அடுத்த பாடல். இது சுந்தரர் மேலை திருமணஞ்சேரி என்று இன்று விளங்கும் எதிர்கொள்பாடியில் பாடியது.
"மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் " என தொடங்கும் பாடலில்

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்,
மருது கீறி ஊடு போன மால், அயனும் அறியா,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்,
கருது கோவில், எதிர்கொள்பாடி என்பது அடைவோமே!

இதன் பொருள் :

யானையின் தோலை உதிரம் ஒழுக போர்த்திக்கொண்டவனும், குழல் போன்ற சடையை உடையவனும், இரு மருத மரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவனும், எங்கள் முதல்வனுமாகிய சிவபிரான் தன இடமாக கருதுகின்ற எதிர்கொள்பாடி திருக்கோவிலை அடைவோம் வாருங்கள் என்று பாடுகின்றார்.

இப்பாடலில் இரு மருதமரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத, வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவன் என்று அண்ணாமலையாரை உருவகப்படுத்தி பாடுவதை நாம் காணலாம்.

4 comments:

  1. அருமையாக இருக்கின்றது பிரியா....சுந்தரர் எம்பெருமானை "அண்ணாமலையானே" என அழைக்கும் ஒரு பாடல் உள்ளது.....காட்டூர்க் கடலே எனும் தொடங்கும் பதிகத்தில் வ்ரும் பாடல் இதோ....

    "தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
    வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
    ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
    ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே".

    பொருள்
    தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே, வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே, அழித்தல் தொழிலை உடையவனே, திரு ஆனைக் காவில் உள்ளவனே, அண்ணாமலையானவனே, மேலானவனே, உடலோம்புதலை விட்டு, உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே, உன்னை உணர்வார்கள்.

    ReplyDelete
  2. அப்புறம் முடிப்பது கங்கை எனும் தொடங்கும் பதிகத்திலும் பாடுகின்றார் உங்கள் ஊர்ஸ்...

    "அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
    வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
    புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
    எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே"

    ReplyDelete
  3. முடிப்பது கங்கை என தொடங்கும் பொது பாடலில் இருந்தும் திருவானைக்கா பாடலில் இருந்தும் மேற்கோள் கூறியதற்கு நன்றி. இன்னும் இன்னும் நெறைய இருக்கு. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்: இவ்வளவு (நான் கண்டு பிடித்தது இருபதுக்கும் மேல்) பாடல்களில் அண்ணாமலையாரை பாடியவர் திருவண்ணாமலைக்கு செல்லாமலேவா இருந்திருப்பார்? ஒரு வேளை திருவதிகைக்கும் சீர்கழிக்கும் செல்லாமல் வெளியில் இருந்து பாடியது போல் பாடினாரோ? சான்றோர்கள் தான் பதில்சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. Here's how you can make a sports bet on your phone
    1. If you're betting on sports, you need to have a mobile device that plays a virtual 토토사이트 sport in order to place a wager.

    ReplyDelete