Sunday 13 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (3)

திருவெண்காடு திருத்தலம் (Photo Courtesy: Shri Raju)


அடுத்த பாடல் புதன் தலமாகிய திருவெண்காட்டிலே சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்

படங்கொள் நாகஞ் என தொடங்கும் பதிகத்தில் அவர் பாடுகிறார்:

மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ங்னே தான்?
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய 
வேடம் காட்டி திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே !

 இப்பாடலில் கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நீ உன்னை உறுதியான நினைப்புடன் தொழும் பக்தர்களுக்காக பல மாடங்களை உடைய கச்சியம்பதியில் எழுந்தருளி உள்ளாய். மேலும் பேய்கள் பாடும் காட்டிலும் ஆடல் கொண்டுள்ளாய். உன்னை நாடி வந்த பிரமனும் திருமாலும் உன் அடி முடி காண இயலா வண்ணம் அனல் உரு கொண்டு நின்றவனே, உன்னை நாங்கள் வழிபடுவது எவ்வாறு? என்று திருவண்ணாமலையில் இறைவன் காட்டிய கோலத்தை குறிப்பிட்டு பாடுகிறார்.

3 comments:

  1. பிரியா அவர்களுக்கு,

    நல்ல வலைத்தளம்! மிகவும் பயனுள்ள தகவல்கள்!

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன்.
    அருமையான தகவலுக்கு நன்றி.
    தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
    நம்ம தளத்தில்:
    "மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

    ReplyDelete