Friday 13 July, 2012

கரபுரநாதர்



சென்னை - வேலூர் மார்கத்தில் காவேரிபாக்கத்துக்கு அருகே உள்ளது திருப்பாற்கடல். இங்குள்ள கரபுரநாதர் ஆலயத்தை அப்பர் தன் காப்பு திருத்தாண்டகத்தில் வைப்பு தலமாக பாடியுள்ளார்.

ஆலயத்தை பற்றிய குறிப்புக்கள் ஆங்கிலத்தில் இதோ

http://aalayamkanden.blogspot.in/2012/07/treasure-trove-waiting-to-be-explored.html 

அப்பர் பாடிய பாடல் வருமாறு

தெண்ணீர் புனற் கெடில வீராட்டமும்
    சீர்காழி வல்லத் திருவேட்டியும்
உண்ணீரார்  ஏடகமும் ஊறல் அம்பர்
    உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி
    மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங் 
    காபாலியாரவர் அவர்தங் காப்புகளே

இத்தலத்திற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவராகும். அப்பாடல் இதோ:


இக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் இதோ:

கார்சொரியும் பாலாற்றின் களிபெய்தும் பஞ்சதரு பார்பொழியும் செந்நெற் பாலிக்கும் - தார்கேழில் திருகரபுரத்தீசன் தீபமஹோத்சவத்திற்காப் பெருச்சாளி யூர்தியை பேணு

ஒலி கடல் சூழ்ந்த உலகிற்கு ஒரு மாமணி யென விளங்கும் நாவலோங்கிய மா பெருந்தீவினுள் தொன்மை நலன்கவின் குமரி கண்டத்திலே முத்தமிழ் சீவணி மூவா நலந்தரும் ஒண்டமிழ் நாட்டில் தண்டகன் முதலா தண்டாசிறப்பின் பண்டை மன்னர் பற்பலர் ஆண்ட தொண்டை நாட்டின் கண்ணே முத்திதரு நகர் எழிலின் முதன்மையானதும், எல்லா உலகங்கட்கும் இறைவியாகிய உமையம்மையாரே திருகாமகோட்டதில் எழுந்தருளி இருந்து உயிர்களிடத்து அருளைக் கொண்டருளிய காமகண்ணியார் என்னும் பெயரோடு பொருந்தி முப்பத்திரெண்டாம் வனத்தருளியுள்ள கம்பையாற்றின் கண் ஒப்புயர்வற்ற ஒரு மாவின் கீழ் மணல் லிங்கமூர்த்தியை எழுந்தருளப் பண்ணி பூசிக்கும் பொழுது அம்மையின் அன்பை விளக்கும் பொருட்டு எம்பெருமான் ஏவிய வெள்ளத்துக்கு ஆற்றாது அச்சிவளிங்கபெருமானை தழுவிக் கொள்ள அவர் குழைந்தருளி முலைதழும்பும் வளைத்தழும்பும் கொண்டு வீற்றிருக்க பெற்றதும், துண்டிரன், தண்டகன், தொண்டைமான்கள், பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரத்து அரசர்கள் முதலிய பல்லோர்களால் ஆளப்பட்டதும் இன்றைக்கு 4300 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மண்டலத்தை சோழன் திருமாவளவனாகிய கரிகாற் பெருவளத்தான் நாடாகி நகரம் ஸ்தாபிக்க பட்டதும் பழைய கல்வெட்டுகளிலும், சங்க நூல்களிலும் கடற்கச்சி என்று சிறப்பிக்க பட்டதுமான காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய படுவூர் கோட்டத்து தனியூரான அவனி நாராயண சதுர்வேதி மங்கலம் என்கிற காவேரிபாக்கதிற்கு தெற்கில் இரண்டு மைல் தூரத்தில் உள்ள திருபாற்கடல் என வழங்கும் கரபுரத்தில் மிகவும் பழமையுற்றதும் மூவர் தேவாரத்தில் வைப்பு தலமாக பாடப்பட்டதும் ,மதுரை கொண்ட கோபரகேசரிவர்மன், பார்த்திவேந்திர பல்லவன், இளங்கோ வேளார்பூதி முதலிய பல அரசர் காலத்து கல்வெட்டுகள் அமைக்க பெற்றதும், ஈழத்தரையின் போரில் வெற்றி கொண்ட காரிமங்கலமுடையார் முதலிய நால்வரால் திருப்பணி முதலிய செய்யப்பட்டதும் அடியார்கள் இடர்கள் நீக்கியாளும் பொருட்டு திருக்கோயில் கொண்டு எழுந்தருளி நின்ற ஸ்ரீ அபிதகுஜாம்பாள் வாமபாகத்தில் அமர்ந்த திருகரமுடைய நாயனார்.

இதிலிருந்து இக்கோவிலின் தொன்மையையும், காலத்தையும், நாம் நன்கு அறியலாம்.

#yOqnezkbLZ# 

14 comments:

  1. இக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பிரியா! இனிய பாராட்டுகள்.

    நம்ம பட்டர்ஃப்ளை சூர்யா அனுப்பிய சுட்டியில் இருந்து இங்கே வந்தேன்.

    சின்ன ஒரு விண்ணப்பம்: இந்த வேர்டு வெரிஃபிகேஷனை தூக்கிட்டால் பின்னூட்டம் இடும் அன்பர்களுக்கு வசதி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருமதி. துளசி. வோர்ட் வேரிபிகேஷன் நீக்கப்பட்டு விட்டது.

      Delete
  3. வாழ்த்துகள் ப்ரியா...

    துளசி டீச்சர் வந்தாச்சா.. என்ஜாய்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  4. ஆடி மாதச்சிறப்பினைப் பற்றி கூகிளில் தேடுங்கால்
    ஆலயம் ஒன்றினைக்கண்டேன். அதிசயித்தேன்.

    கரபுர நாதர் கோவிலைக் கண்டு மிக மகிழ்ந்தேன்.செ
    கூடவே தொண்ணூறு ஆண்டுகட்கு முன் அச்சடிக்கப்பட்ட மடலா இது !!
    தமிழ் நடை அக்காலத்தே மணிப்பிரவாளம் என்று கேள்விப்பட்டு இருந்தேன்.
    இது தூய தமிழாக இருக்கிறதே !!

    நல்ல செய்திகள் அடங்கிய பதிவு.

    ஆசிகள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  5. அருமையான ஆலயம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. இந்த உங்கள் துப்பாக்கி அது இடம் பற்றி அதிக தகவல் கொடுக்கிறது அற்புதமாக இருக்கிறது உங்கள் முதல் வருகைக்கு ஆகிறது. கோயில் மதுரை ரயில் 8 கிலோமீட்டர் தென் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் சுப்ரமணிய ஆறு படை வீடுகளில் ஒன்று. நீங்கள் சாமுண்டி கோயில் மேலும் எழுத முடியும் என்றால் கூட அது மிகவும் வாசகர் பெரும் பொருள் இருக்கும்.

    ReplyDelete
  8. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. மிக்க நன்றி. இன்னும் பல அறிய தகவல்களை இந்த வலைப்பூவின் மூலம் தர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  10. 'கூவம் நதிக்கரை கோவில்கள் அழிகின்றன'என்னும் தலைப்பில், இன்றைய தினமலரில் உங்கள் நூல் வெளியீடு பற்றி்ய செய்தியைப் படித்தேன். உங்களுடைய நூல் குறித்து என்னுடைய அகரமுதல மின்னிதழில்( www.akaramuthala.in ) வெளியிட விரும்புகின்றேன்.

    தங்கள் புத்தகம் பற்றிய குறிப்புகள், புத்தகத்தில் உள்ள அணிந்துரை முதலான கருத்துரைகள் ஆகியவற்றையும் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தையும் எனக்கு thiru2050@gmail.com மின்வரியில் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
    நன்றி.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
    9884481652

    ReplyDelete
  11. Slot Machines at Harrah's Casino - Joliet Business Directory
    With over 100 slot machines available, the 구미 출장샵 hotel offers 파주 출장안마 high-quality 서산 출장마사지 room 안산 출장안마 service. Enjoy 동두천 출장샵 the comfy beds, plush beds, bathtub,

    ReplyDelete