Wednesday 28 December, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (4)

நீண்ட இடைவெளிக்கு பின் இதோ அடுத்த பாடல். இது சுந்தரர் மேலை திருமணஞ்சேரி என்று இன்று விளங்கும் எதிர்கொள்பாடியில் பாடியது.
"மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் " என தொடங்கும் பாடலில்

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்,
மருது கீறி ஊடு போன மால், அயனும் அறியா,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்,
கருது கோவில், எதிர்கொள்பாடி என்பது அடைவோமே!

இதன் பொருள் :

யானையின் தோலை உதிரம் ஒழுக போர்த்திக்கொண்டவனும், குழல் போன்ற சடையை உடையவனும், இரு மருத மரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவனும், எங்கள் முதல்வனுமாகிய சிவபிரான் தன இடமாக கருதுகின்ற எதிர்கொள்பாடி திருக்கோவிலை அடைவோம் வாருங்கள் என்று பாடுகின்றார்.

இப்பாடலில் இரு மருதமரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத, வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவன் என்று அண்ணாமலையாரை உருவகப்படுத்தி பாடுவதை நாம் காணலாம்.